குந்தி மகாராணியின் போதனைகள் ( Kundhi Maharanieen Podhanaikal )
Description
"துக்கத்தையும் தைரியத்தையும் தனதாக்கிய குந்தி மகாராணி, சிறப்புமிக்க பண்டைய பாரத வரலாற்றில் முக்கியப் பங்கு வகிக்கின்றாள். பாரதத்தின் அரியணைக்காக நிகழ்ந்த கொடூரமான போருக்கு காரணமாக இருந்த அரசியல் நாடகத்தில் இவள் மையமாகத் திகழ்ந்தாள். பல்வேறு துன்பங்களுக்கு மத்தியிலூம், தனது ஆன்மீக ஞானத்தினாலும் பலத்தினாலும் தனது மக்களை அவள் முறையாக வழிநடத்திச் சென்றாள். புனிதத் தன்மைகள் பொருந்திய மிகச்சிறந்த ஆத்மாவான குந்திதேவியின் எளிமையான போதனைகள், ஆழமான தெய்வீக உணர்ச்சிகளையும் தத்துவங்களையும் வெளிப்படுத்துகின்றன. அவை ஆன்மீக அறிஞர்களின் அறிவைத் துளைக்கக்கூடியவை. அக்கருத்துகள், வேதப் பண்பாட்டிலும் தத்துவத்திலும உலகப் பிரசித்தி பெற்றவரான தெய்வத்திரு. அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் அவர்களால். குந்தி மகாராணியின் போதனைகள் என்னும் இப்புத்தகத்தின் மிகவும் தெளிவான முறையில் சக்தியுடன் வழங்கப்பட்ள்ளன."