பிரகலாதன் திவ்ய உபதேசங்கள் ( Pragalaadhan dhivya Ubhadhesangal )
Description
ஐந்து வயதே நிரம்பிய சிறுவனான பிரகலாத மஹாராஜர் தனது நாத்திக தந்தையான ஹிரண்யகசிபுவின் தொந்தரவுகளுக்கு மத்தியிலும் சக பள்ளி மாணவர்களிடம் தன்னுணர்வு குறித்த தெய்வீக விஞ்ஞானத்தை போதிக்கின்றார். அந்த தெய்வீக ஞானத்தை, அவர் தனது தாயின் கருவில் இருந்தபோது, தனது ஆன்மீக குருவான நாரத முனிவரிடமிருந்து பெற்றார். இச்சிறிய புத்தகத்தினுள் தொகுக்கப்பட்டுள்ள அந்த அற்புதமான போதனைகள், தியானம், புலன் கட்டுப்பாடு, மன அமைதியைப் பெறுதல் போன்றவை மட்டுமின்றி, வாழ்வின் உயர்ந்த குறிக்கோளான கடவுளின் மீதான தூய அன்பினை அடைவதற்கும் நமக்கு கற்றுத் தருகிறது.