language pack

பகவத் கீதை உண்மையுருவில் ( Bhagavad Geedhi Unmaiyuruvil )

Author: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்

Description

உலகிலேயே மிகவும் பிரசித்தி பெற்ற பகவத் கீதை வேத ஞானத்தின் மணிமகுடமாக உலகம் முழுவதும் உணரப்படும் பகவத் கீதை, முழுமுதற் கடவுளான ஸ்ரீ கிருஷ்ணரால் அவரது நெருங்கிய நண்பனும் பக்தனுமான அர்ஜுனனுக்கு உபதேசிக்கப்பட்டது. கீதையின் எழுநூறு ஸ்லோகங்களும் மனித சமுதாயத்தின் ஆன்மீக முன்னேற்றத்திற்கு மிகச்சிறந்த வழிகாட்டியாகத் திகழ்கின்றன. ஆன்மீக விஞ்ஞானம், ஆத்மாவின் உண்மையான தன்மை, கடவுளுடனான உறவு முதலியவற்றை எடுத்துரைப்பதில், கீதைக்கு இணை வேறெதுவும் இல்லை என்றால் அது மிகையாகாது. உலகின் தலைசிறந்த வேத பண்டிதரான தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடமிருந்து தொடங்கிய ஆச்சாரிய பரம்பரையில் பெறப்பட்ட தன்னிகரற்ற ஞானத்தை இந்நூலில் அப்படியே வழங்குகின்றார். எனவே, கீதையின் இதர பதிப்புகளைப் போன்று அல்லாமல், இந்த பகவத் கீதை உண்மையுருவில் நூலானது கீதையின் செய்திகளை பொருள் சிதைவு அல்லது சொந்த கருத்துகள் ஏதுமின்றி உள்ளது உள்ளபடி வழங்குகின்றது."