மறுபிறவி ( Marupiravi )
Description
இதுவரை எங்கும் காணப்படாத முழுமையான விளக்கங்கள் வாழ்க்கை பிறப்பில் தொடங்கி இறப்பில் முடியக்கூடியது அல்ல. ஆத்மா தனது தற்போதைய உடலை விட்டு வெளியேறும்போது, நடப்பது என்ன? அது மற்றோர் உடலை ஏற்கின்றதா? இதுபோன்ற மறுபிறவிகளுக்கு முடிவு உண்டா? மறுபிறவி எதன் அடிப்படையில் நிகழ்கின்றது? நமது வருங்கால பிறவிகளை நம்மால் கட்டுப்படுத்த முடியுமா? மறுபிறவி என்னும் இந்நூல், இத்தகு ஆழமான கேள்விகள் எல்லாவற்றிற்கும் பதிலளிக்கின்றது; காலத்திற்கு அப்பாற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட சாஸ்திரங்களை அடிப்படையாகக் கொண்டு, மறுபிறவி குறித்த தெளிவான உண்மைகளையும் முழுமையான விளக்கங்களையும் இது வழங்குகின்றது.